/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறப்பு
/
நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறப்பு
ADDED : ஏப் 26, 2025 03:53 AM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி கம்பன் நகரில் பா.ஜ., செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள, நீர், மோர், பந்தலை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார்.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பழச்சாறு கடைகளிலும், தர்பூசணி கடைகளிலும் குவிகின்றனர்.
இந்நிலையில் மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், உழவர்கரை தொகுதி பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கம்பன் நகர் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கினார்.

