/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் ஆழம் அளவீடு
/
சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் ஆழம் அளவீடு
ADDED : டிச 04, 2024 05:45 AM

புதுச்சேரி: குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் செல்லும் தண்ணீர் ஆழத்தினை மத்திய நீர் ஆணையம் சார்பில், நவீன இயந்திரம் மூலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.
புதுச்சேரி, குமாரப்பாளையம் கிராமத்தில் மத்திய அரசு கட்டுபாட்டின் கீழ் மத்திய நீர் ஆணைய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் கடந்த 1998ம் ஆண்டு முதல் குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் போது, 'கரண்டி வாட்டர் மீட்டர்' எனும் நவீன இயந்திரம் மூலம் எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பதை அளவீடு செய்து, மத்திய அரசுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, தமிழகத்தில் பெய்த கனமழையால் வீடூர் அணை திறக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த 3 நாட்களாக மத்திய நீர் ஆணையம் மூலம் குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் வழியாக செல்லும் தண்ணீரின் ஆழம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, குமாரப்பாளையம் மேம்பாலத்தில் இருந்து மத்திய நீர் ஆணைய மேற்பார்வையாளர் விஷ்ணுபிரசாத் தலைமையில் ஊழியர்கள் சுந்தரராஜன், பிரபாகரன் ஆகியோர் நேற்று கயிறு மூலம் 'கரண்டி வாட்டார் மீட்டர்' இயந்திரத்தை சங்கராபரணி ஆற்றில் இறக்கி, அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அதில், நேற்று 500 மீட்டர் ஆழ அளவில் தண்ணீர் குமாரப்பாளையம் வழியாக சென்றது. நேற்று முன்தினம் அளவீடு செய்தபோது, அதிகபட்சமாக 3,000 மீட்டர் ஆழ அளவில் தண்ணீர் சென்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.