ADDED : ஏப் 28, 2025 04:32 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
முதலியார்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஏற்பாட்டில் கடலுார் சாலையில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வெள்ளரி, இளநீர், நுங்கு, நீர்மோர், தர்ப்பூசணி மற்றும் திராட்சை வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஜெ., பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன்,அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி , எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் மருதமலையப்பன்,மாநில மாணவரணி செயலாளர் பிரதீப், வர்த்தக அணி செயலாளர் முத்துராஜூலு, அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர்வரதன்,ஜெ., பேரவை துணைச் செயலாளர் சுரேஷ்,மகளிர் அணி இணைச் செயலாளர் தேன்மொழி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் ராஜேஷ்,இணைச்செயலாளர் செல்வகணபதி,அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் ராஜா, முதலியார்பேட்டை தொகுதி செயலாளர் கருணாநிதி, அவைத் தலைவர் காந்தி, இணைச் செயலாளர் கவுரி, துணை செயலாளர்கள் சங்கரி, வடிவேல்,மாநில அவைத் தலைவர் செல்வகுமார், இணைச் செயலாளர் வனஜா, கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.