/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொம்பாக்கம் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
/
கொம்பாக்கம் பகுதியில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : அக் 08, 2025 08:10 AM
புதுச்சேரி : கொம்பாக்கம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் பணி மேற்கொள்வதையொட்டி, நாளை (9ம் தேதி ) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, கொம்பாக்கம், கொம்பாக்கம்பேட், குப்பம், குப்பம் பேட், ஒட்டம்பாளையம், கர்ம வீரர் காமராஜர் ஆசிரியர் காலனி, பாப்பாஞ்சாவடி, துர்கா நகர், லட்சுமி அவென்யூ, ஜானகி நகர், கமலம் நகர், பிரியங்கா அவென்யூ, பாலாஜி நகர், ஜோதி நகர், திருவள்ளுவர் நகர், அமிர்தாம்பாள் நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.