/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேட்டுப்பாளையத்தில் இன்று, நாளை குடிநீர் 'கட்'
/
மேட்டுப்பாளையத்தில் இன்று, நாளை குடிநீர் 'கட்'
ADDED : ஜூலை 07, 2025 01:44 AM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேட்டுப்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று(7 ம் தேதி), நாளை (8 ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரையில், மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், மாணிக்கசெட்டியார் நகர், சோனியாகாந்தி நகர், வடக்கு பாரதிபுரம், மீனாட்சிபேட்டை, வி.பி.சிங். நகர், மங்கலட்சுமி நகர், ராம் நகர், கதிர்காமம், நெசவாளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.