/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'
/
முத்தியால்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : ஜூன் 13, 2025 03:20 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை பகுதியில் நாளையும், உழவர்கரை பகுதிகளில் 17, 18, 19 ஆகிய நாட்களில் குடிநீர் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்குட்பட்ட வைத்திக்குப்பம் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 14ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை, முத்தியால்பேட்டை, சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வ.உ.சி., நகர், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இதேபோல் உழவர்கரை வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யும் பணி 17, 18, மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. எனவே அன்றைய தினங்களில், மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை ஜெ.ஜே., நகர், என்.எஸ்.சி., போஸ் நகர், தென்றல் நகர், யோகலட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி, சரஸ்வதி நகர், அன்னை தெரசா நகர், மூலக்குளம், உழவர்கரை, வயல்வெளி, கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், சிவகாசி நகர், வள்ளலார் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.