தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கதிர்காமம், தர்மாபுரி பகுதிகளில் குடிநீர் வினியோகம் 'கட்'

கதிர்காமம், தர்மாபுரி பகுதிகளில் குடிநீர் வினியோகம் 'கட்'

கதிர்காமம், தர்மாபுரி பகுதிகளில் குடிநீர் வினியோகம் 'கட்'


UPDATED : செப் 19, 2026 06:47 PM

ADDED : செப் 19, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 06:47 PM ADDED : செப் 19, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு பணிகள் நடப்பதால், கதிர்காமம், தர்மாபுரி தனபாலன் நகர் பகுதிகளில் 21ம் தேதி குடிநீர் வினியோகம் தடைபடும் என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி ஆனந்தா நகர் மேல்நிலைத் தேக்க தொட்டியில் சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் 21ம் தேதி காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை ஆனந்தா நகர், கதிர்காமம், ராதாகிருஷ்ணா நகர், மீனாட்சிபேட்டை, திலாசுப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும்.

அதேபோல், புதுச்சேரி தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிளில், சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், காலை 10:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை தனகோடி நகர் தர்மபுரி, லெனின் வீதி, சபரி நகர் மற்றும் புரட்சிதலைவி நகர், அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும்.

மேலும், தனபாலன் நகர் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டியில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 23ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை காந்திதிருநல்லுார், தனபாலன் நகர், கல்கி நகர், என்.ஆர்.ராஜிவ் நகர், வள்ளலாளர் நகர், செந்தில் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us