தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்: தயக்கமின்றி மக்களிடம் ஓட்டு கேளுங்கள் என்.ஆர்.காங்., தொண்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

 ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்: தயக்கமின்றி மக்களிடம் ஓட்டு கேளுங்கள் என்.ஆர்.காங்., தொண்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

 ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்: தயக்கமின்றி மக்களிடம் ஓட்டு கேளுங்கள் என்.ஆர்.காங்., தொண்டர்களுக்கு முதல்வர் உத்தரவு


ADDED : பிப் 08, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியின் 16ம் ஆண்டு விழா இ.சி.ஆரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. விழாவில், முதல்வர் ரங்கசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து, பேசியதாவது:

என்.ஆர்.காங்., கட்சி துவங்கிய நோக்கத்தின்படி இந்த அரசு, மாநில வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளோம். மத்திய அரசின் உதவியோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். விரைவில் தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ளோம். தேர்தலில் வெற்றி பெற்று நாம் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.

அரசு துறைகளில் காலியாக இருந்த 4,500 பணியிடங்களை நிரப்பி உள்ளோம். எல்லோரும் வியக்கும் வகையில் முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர், விதவை உதவித் தொகைகள் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 31 ஆயிரம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்.

அதேபோல் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகள் 71 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வரும் 10ம் தேதி முதல் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

அரசு எதையும் செய்யவில்லை என யாராலும் சொல்ல முடியாது. சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கரசூரில் எடுக்கப்பட்ட 750 ஏக்கர் நிலத்தில் விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய தொழிற்சாலைகள் துவங்கப்பட இருக்கிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில், நாம் உறுதியாக உள்ளோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமன்றி, சட்டசபையில் கூறிய திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். எவ்வித தயக்கமின்றி, மக்களை சந்தித்து நாம் செய்த திட்டங்களை கூறி ஓட்டு கேட்கலாம்.

நமக்குள் இருக்கும் சிறு, சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைவரும் சிறப்பாக தேர்தலில் பணியாற்றி, நம் கட்சியை வெற்றியடைய செய்ய வேண்டும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us