/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பல்கலை., மாணவி விவகாரம் வெள்ளை அறிக்கை வேண்டும்'
/
'பல்கலை., மாணவி விவகாரம் வெள்ளை அறிக்கை வேண்டும்'
ADDED : ஜன 19, 2025 06:12 AM
புதுச்சேரி: 'புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலை மாணவி, வெளிநபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து,உள்துறை அமைச்சர்வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்' என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில், படிக்கும் மாணவி கடந்த, 11ம் தேதி,4 வெளி நபர்களால் தாக்கப்பட்டார்.இது குறித்து பல்கலை., நிர்வாகம் புகார் அளித்தது. இதன்அடிப்படையில், பல்கலை வளாகத்தில் அத்து மீறி நுழைதல், ஆபாசமாக திட்டுதல் போன்ற குற்றச் சாட்டுகளுக்காக போலீஸ் துறை குறிப்பிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் பல்கலை நிர்வாகம், மாணவி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை மூடி மறைத்து புகார் அளித்தது ஏன் என்று தெரியவில்லை.
பல்கலை வளாகத்திற்குள் வெளி நபர்கள் மூலம், சட்டவிரோதமாக மாணவி தாக்கப்பட்டதற்கு, தானே முழு பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளதாகவும்தெரியவில்லை.
இது குறித்து உயர்கல்வி செயலரோ, தலைமை செயலரோ, அமைச்சர்களோ, எவ்வித விளக்கமும் மக்களுக்கு தெரிவிக்காதது அரசின் பொறுப்பற்ற செயல்.
இந்த பிரச்னையை இதற்கு மேலும் வளர விடாமல் உள்துறை அமைச்சர் ஒளிவு மறைவு இல்லாத வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.