/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சுயநலத்திற்காக நாம் விலைபோக கூடாது'
/
'சுயநலத்திற்காக நாம் விலைபோக கூடாது'
ADDED : ஜன 26, 2026 04:20 AM
புதுச்சேரி: ஒரு சிலரின் சுயநலத்திற்காக நாம் விலை போய் விடக்கூடாது என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மக்களுக்காக, மக்களின் நன்மைகளுக்காக மக்களால் ஆளப்படுகின்ற ஆட்சியாக நமது நாடு எப்போதும் தொடர்ந்து இருக்க வேண்டும்.
குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், மீனவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், என அனைத்து விதமான மக்களும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மக்களும் எந்த விதமான பிரிவினையும் இன்றி, அல்லது எந்தவிதமான பிரிவினையையும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்படுத்தாமல், வேற்றுமையிலும் ஒற்றுமையாக வளர்ச்சி அடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
அரும்பாடு பெற்ற இந்த மக்களாட்சி ஒரு சிலரின் சுயநலத்திற்காக நாம் விலை போய் விடக்கூடாது. நமது புதுச்சேரி மாநிலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளால் மட்டுமேமுழுமையாக ஆளப்பட வேண்டும்.
உண்மையான குடியரசு ஆட்சி புதுச்சேரியில் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

