/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., கட்சியில் இணைவது ஏன்? மாஜி எம்.எல்.ஏ., செல்வம் பேட்டி
/
காங்., கட்சியில் இணைவது ஏன்? மாஜி எம்.எல்.ஏ., செல்வம் பேட்டி
காங்., கட்சியில் இணைவது ஏன்? மாஜி எம்.எல்.ஏ., செல்வம் பேட்டி
காங்., கட்சியில் இணைவது ஏன்? மாஜி எம்.எல்.ஏ., செல்வம் பேட்டி
ADDED : ஜன 26, 2026 04:19 AM
புதுச்சேரி: தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
நான் கடந்த 2001ம் ஆண்டு முதல் இளைஞர் காங்., தலைவராக கட்சியில் 10 ஆண்டுகள் பணியாற்றினேன். காங்., கட்சியில் இருந்து முதல்வர் ரங்கசாமி விலகியபோது, அவருடன் சென்றேன். அவர், புதிய கட்சி துவங்கி 2011ல் முதல்வராக பதவி ஏற்றார். நான் மண்ணாடிப்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றேன். பின், 2016ம் ஆண்டு பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்தபோது, மக்களிடையே சரிவு ஏற்பட்டது. அப்போது, பா.ஜ., கூட்டணி உங்களது பெயரை கெடுக்கும் என, கருத்து தெரிவித்தோம்.
ஆனால், மீண்டும் மக்கள் விரோத சக்தியான பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளார். அவருடைய விருப்பம். கடந்த 2021ல் மண்ணாடிப்பட்டு தொகுதியில் அவரது மருமகன் நமச்சிவாயத்திற்கு வாய்ப்பு கொடுத்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் கட்சி கட்டுப்பாட்டை மீறாமல் ஐந்தாண்டுகளாக பயணித்தேன்.
முதல்வர் தங்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை கொடுத்து வந்தார். ஆனால், நமச்சிவாயம் என்.ஆர்.காங்., கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டதால், கட்சியினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது. மேலும், தொகுதியில் எம்.எல்.ஏ.,வை பார்க்க முடியாத மக்கள் மற்றும் என்னுடைய ஆதரவாளர்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிட வலியுறுத்தினர்.தொகுதியில் என்னிடம் வருபவர்களுக்கு அதிகாரிகள் மூலம் தேவைகளை செய்து கொடுத்தேன். அதற்கும் அதிகாரிகளை அமைச்சர் திட்டியதால், சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க காங்., கட்சியில் இணைவதாக முடிவு செய்துள்ளேன்' என்றார்.

