/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் இணைய வழி பயிலரங்கம்
/
காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் இணைய வழி பயிலரங்கம்
காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் இணைய வழி பயிலரங்கம்
காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் இணைய வழி பயிலரங்கம்
ADDED : ஜன 02, 2025 06:39 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் காது கேளாதவர்களுக்கான இணைய வழி பயிலரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வில்லியனுார் பிரதான சாலை, விவேகானந்தா நகரில் மூகாம்பிகாஇணை மருத்துவக்கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரி வளாகத்தில் இயங்கி வரும்,மூகாம்பிகா பேச்சு மற்றும் காதுகேளாதவர்களுக்கான சிறப்பு பள்ளிசார்பில்,இணைய வழி பயிலரங்கம் நடந்தது.
காது கருவிகள் மற்றும் 'காக்லியர் இம்பிளண்ட்' பயன்படுத்தும் குழந்தைகளுக்கான மென்மொருள் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் செவித்திறன் மறுவாழ்வு எனும் தலைப்பில்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காட்டாங்கொளத்துார்,எஸ்.ஆர்.எம் பல்கலைபேச்சு, மொழி, கேட்பியல் துறை முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேச்சு, மொழி, கேட்பியல் நிபுணர் மகபூப் சனாஸ் மற்றும் சிறப்பு ஆசிரியர் சித்ரா, இணைய வழியில் பயிலரங்கை நடத்தினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் முத்துக்குமரன் வரவேற்றார். டாக்டர் அனுஷாநன்றி கூறினார். டாக்டர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.