/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோயாளிடம் போன் திருடிய நபருக்கு வலை
/
நோயாளிடம் போன் திருடிய நபருக்கு வலை
ADDED : ஜன 06, 2024 04:56 AM
புதுச்சேரி: சென்னை, ஐயப்பன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 60; சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கு இதய நோய் பிரச்னை இருக்கிறது. சிகிச்சைக்காக மாதந்தோறும் புதுச்சேரி ஜிப்மர் வந்து செல்வார்.
நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஜிப்மர் வந்த அவர், பரிசோதனை செய்து விட்டு, ஊருக்கு செல்ல, புதுச்சேரி பஸ் நிலையத்தில், பஸ்சில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென, அவர் சட்டை பையில் இருந்த மொபைல் போனை திருடி கொண்டு தப்பியோடினார். அவர் சத்தம் போடவே அந்த நபர் தலைமறைவாகினார்.
புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போனை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.