ADDED : பிப் 08, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: வாலிபரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கல்மண்டபம் புதுநகர் 2வது தெருவை சேர்ந்தவர் சேதுபதி, 23, இவர், கடந்த மாதம் 5ம் தேதி அதே பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை ஆபாசமாக பேசினார்.
இதனை தட்டிக்கேட்ட சேதுபதியை ஆறுமுகம், அவரது அண்ணன் கோவிந்தன், தம்பி கஜேந்திரன் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
பலத்த காயமடைந்த சேதுபதி நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மூவர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.