/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூனிச்சம்பட்டு கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
கூனிச்சம்பட்டு கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : செப் 27, 2025 02:10 AM

புதுச்சேரி : கூனிச்சம்பட்டு தேவநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், புரட்டாசி மாத திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. கோவில் பூசாரிகள் திருக்கல்யாண மாலைகளை நடனமாடி கொண்டு வந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாத பெருமாளுக்கு அணிவித்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்த பின், திருமாங்கலயம் வைக்கப்பட்டிருந்த தேங்காய் ஏலம் விடப்பட்டது.
அதனை பெண் பக்தர் ஒருவர் 400 ரூபாய்க்கு ஏலம் எடுத்து மடியேந்தி பெற்று கொண்டார். இந்த தேங்காயை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தினால், சகல நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.