/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரம் முருகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
சாரம் முருகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : அக் 30, 2025 07:33 AM

புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சாரம், முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம் மோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. அன்று முதல் வரும் 3ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் யாகசாலை பூஜையும், இரவில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வள்ளி தெய்வானை சிவசுப்பரமணிய சுவாமி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
முன்னதாக சீர்வரிசை கொண்டுவருதல், தாம்பூல தட்டு மாற்றுதல் நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் கவுன்சிலர் கணேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன்.நீலகண்டன் மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

