/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே சங்கத் தலைவர் இல்ல திருமண விழா
/
கராத்தே சங்கத் தலைவர் இல்ல திருமண விழா
ADDED : ஜூன் 09, 2025 04:51 AM

புதுச்சேரி : கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் இல்ல திருமண விழா புதுச்சேரி, வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்தது. விழாவில் மணமக்கள் முகேஸ்வரன் - கீர்த்தி ப்ரீத்தி ஆகியோரை முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார்.
அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள்., நேரு, பாஸ்கர், ஜான்குமார், சிவசங்கரன் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயபால், மற்றும் இந்திய தற்காப்பு கலை சங்கத்தின் சேர்மன் ராஜா, உழவர்கரை சமூக சேவகர் வக்கீல் சசிபாலன், விளையாட்டு வீரர்கள் நல சங்க ஆலோசகர் வக்கீல் பரிமளம், விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் வளவன், கராத்தே சங்கப் பொருளாளர் சுந்தரராஜன், கராத்தே சங்க மூத்த துணைத் தலைவர்கள் மதிஒலி, அசோக் குமார், விளையாட்டு வீரர்கள் நல சங்க சேர்மன் ஆளவந்தான், விளையாட்டு வீரர்கள் நல சங்க கவுரவத் தலைவர் திருவேங்கடம், அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்., தலைவர் பாஸ்கர், தொழிலதிபர்கள் ராஜகோபால், ஜெகதீசன், சேது மன்னன், ஒலிம்பிக் சங்க செயல் தலைவர் முத்து கேசவலு, பொதுச் செயலாளர் தனசேகரன், கிக் பாக்ஸிங் சங்க நிர்வாகிகள் மோகன், அமிர்தராஜ், பிரவீன் குமார், அய்யனார், சந்திரகுமார், விநாயகம், ராஜ்குமார், மனோ, செபஸ்தியன், அனைத்து விளையாட்டு வீரர்கள் நல சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மணமக்களை வாழ்த்தினர்.