/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுவை தமிழ் சங்க செயலர் மோகன்தாஸ் இல்ல திருமண விழா
/
புதுவை தமிழ் சங்க செயலர் மோகன்தாஸ் இல்ல திருமண விழா
புதுவை தமிழ் சங்க செயலர் மோகன்தாஸ் இல்ல திருமண விழா
புதுவை தமிழ் சங்க செயலர் மோகன்தாஸ் இல்ல திருமண விழா
ADDED : செப் 09, 2025 06:34 AM

புதுச்சேரி : புதுவை தமிழ் சங்க செயலர் மோகன்தாஸ்- உமா மகேஸ்வரி இவர்களின் மகன் டாக்டர் சுந்தர வடிவேலன், திருச்சி வணிகர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வம்- மணிமேகலை இவர்களின் மகள் டாக்டர் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு விழா புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
விழாவிற்கு புதுச்சேரி மாநில தி.மு.க.. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுவை தமிழ் சங்கத் தலைவர் முத்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கம்பன் கழகச் செயலர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம்.
எம்.எல்.ஏ.,க்கள்., நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், வைத்தியநாதன், சிவசங்கரன், கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்., அனந்தராமன், மூர்த்தி, கலைநாதன், ஜெயபால், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, துணை செயலர் தினகரன். ஆட்சிக் குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, பொறிஞர் சுரேஷ்குமார், சிவேந்திரன், கவிஞர் ஆரா, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்கள்,பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.