
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எஸ்.பி.ஏ. சேகர்- தனலட்சுமி தம்பதியின் மகனும், இளைஞர் காங்., துணை தலைவருமான கல்யாணசுந்தரம் - கீர்த்தனா திருமண வரவேற்பு விழா நடந்தது.
மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் கடந்த 24ம் தேதி நடந்த விழாவில், மணமக்களுக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.
விழாவில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் காங்., மாநில தலைவர் சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, பெத்தபெருமாள், கமலக்கண்ணன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், விஜயவேணிஉள்ளிட்ட நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.