/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாமிகளுக்கு தட்டாஞ்சாவடியில் வரவேற்பு
/
சுவாமிகளுக்கு தட்டாஞ்சாவடியில் வரவேற்பு
ADDED : பிப் 21, 2024 06:53 AM
புதுச்சேரி : மாசிமகம் தீர்த்தவாரிக்கு வருகின்ற சுவாமிகளுக்கு, குண்டுதாங்கிய அய்யனாரப்பன் கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தையொட்டி, தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மயிலம் சிவசுப்ரமணிய சுவாமி, செஞ்சி ரங்கநாதர், மற்றும் வானுார் அழகம்மை உடனமர் அரசனேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் வரும் 23ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர்.
சுவாமிகளுக்கு, அன்று காலை 7:00 மணியளவில், தட்டாஞ்சாவடியில் குண்டுதாங்கிய அய்யனாரப்பன் கோவில் சார்பில்வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழாவில்முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஞானசேகரன் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.

