/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமன்வெல்த் வளுதுாக்கும் போட்டியில் தங்கம் வென்ற விஷாலுக்கு வரவேற்பு

ADDED : அக் 17, 2024 12:14 AM

திருபுவனை : தென் ஆப்ரிக்காவில் நடந்த காமன்வெல்த் பவர் லிப்டிங் (வளு துாக்கும்) சாம்பியஜ்ஷிப் போட்டியில் தங்கம் வென்று புதுச்சேரி திரும்பிய அரசுக் கல்லுாரி மாணவர் விஷாலுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தென் ஆப்ரிக்கா நாட்டில் கடந்த 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்தது.
இதில் சிறப்பு பிரிவில் உலகம் முழுதும் 45 நாடுகளை சேர்ந்த சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட புதுச்சேரி மதகடிப்பட்டு காமராஜர் அரசு கலைக்கல்லுாரியின் பி.பி.ஏ., (சுற்றுலாத்துறை) முதலாம் ஆண்டு மாணவர் விஷால், 59, கிலோ எடைப் பிரிவில் ஸ்குவார்டு-125 கிலோ, பெஞ்ச்-85 கிலோ, டெட் 160 கிலோ என மொத்தம் 370 கிலோ எடையை துாக்கி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
நேற்று புதுச்சேரி திரும்பிய விஷாலுக்கு சொந்த ஊரான மதகடிப்பட்டில் கிராமமக்கள், விளையாட்டு வீர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் நியூ ஸ்டார் கிரிக்கெட் கிளப் சுரேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.