ADDED : ஜூலை 20, 2025 09:44 PM

அ நிறம் | அளவு
திருபுவனை : சிலுக்காரிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
திருபுவனை அடுத்த சிலுக்காரிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் அரசு மாணவ - மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந் தது. விழாவில் பள்ளி பொறுப்பாசிரியர் மீரா வரவேற்றார்.
புதுச்சேரி கல்வித்துறை 5ம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் விழாவிற்கு தலைமையேற்று மாணவ - மாணவி களுக்கு நோட்டுப் புத்தகம், டைரி, புத்தகப் பை, சீருடை, சிறுதானிய உணவுகள், மற்றும் மாணவர்களுக்கு ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் 'மிஷன் இங்கிலீஸ்' புத்தகத்தையும் வழங்கிப் பேசினார்.
விழாவில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவி கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
