/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவி எம்.பி., வழங்கல்
/
நலத்திட்ட உதவி எம்.பி., வழங்கல்
ADDED : நவ 03, 2025 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., அலுவலகத்தில் விடுதலை நாளை முன்னிட்டு நலத்திட்டஉதவி வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி தலைமை தாங்கி, லாஸ்பேட்யை சேர்ந்த சுகுமாரன், அரியாங்குப்பத்தை சேர்ந்த சுமதி, தட்டாஞ்சாவடியை சேர்ந்த கலைவாணி ஆகியோருக்கு தள்ளு வண்டி வழங்கினார்.
இதில், பா.ஜ., முன்னாள் ஓ.பி.சி., அணியின் மாநில தலைவர் நடராஜன் உட்பட லாஸ்பேட் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

