/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சதுர்த்தி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
விநாயகர் சதுர்த்தி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விநாயகர் சதுர்த்தி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விநாயகர் சதுர்த்தி விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஆக 29, 2025 03:21 AM

திருபுவனை: திருபுவனை தொகுதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
திருபுவனை தொகுதியில் அங்காளன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சமூக சேவகர்ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமை தாங்கினார்.
முன்னதாக அவருக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நுாற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக கலிதீர்த்தாள்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலுக்கு சென்றனர். அங்கு நடந்த விழாவில் ஜோஸ்சார்லஸ் மார்ட்டின், எம்.எல்.ஏ., கள் அங்காளன், ரிச்சர்ட் ஜான்குமார், அவரது சகோதரர் ரீகன் ஜான்குமார் ஆகியோருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலிதீர்த்தாள்குப்பம் அமிர்தேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், கலிதீர்த்தாள்குப்பம் குமரன் வரவேற்றார்.
அங்காளன் எம்.எல்.ஏ., முன்னிலையில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிபேசினார். விழாவில் நுாற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.திருபுவனை குமரன் நன்றி கூறினார்.

