/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : டிச 26, 2024 05:57 AM

புதுச்சேரி: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., மற்றும் மாநில தி.மு.க., இளைஞரணி சார்பில், காந்தி வீதியில் கருணாநிதி படிப்பகம் மற்றும் தொகுதி அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாட்டின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தையல் இயந்திரம், சலவை இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், புயலால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட 600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், துணை அமைப்பாளர் தைரியநாதன், குமார், செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், சண்முகம், அமுதாகுமார், நார்கிஸ் பானு உட்பட பலர் பங்கேற்றனர். இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் உத்தமன் நன்றி கூறினார்.