/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
/
அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ADDED : மார் 12, 2024 04:46 AM

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்தகரிப்பு உபகரணம் வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
பண்டசோழநல்லுார் பெர்ஜர் பெயின்ட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில், திருவருட்பா வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் டிவி, அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் சுத்தகரிப்பு உபகரணங்கள் வழங்கல் மற்றும் சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி சீரமைப்பு பணிகளை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சுவாமிராஜ் தர்மக்கண், பொது மேலாளர் அருண்கார்த்திக், மனித வள மேம்பாட்டு அலுவலர் சதீஷ்குமார், தொழிலதிபர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

