/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமூக நலத்துறையில் நலத்திட்டங்கள் முடக்கம்
/
சமூக நலத்துறையில் நலத்திட்டங்கள் முடக்கம்
ADDED : அக் 29, 2025 07:25 AM
புதுச்சேரி: சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட வேண்டிய நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதால், பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமூக நலத்துறை சார்பில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் மழை கோட்டு இந்தாண்டு இதுவரை வழங்கப்படவில்லை.
அதேபோன்று, முதியோர்களுக்கு வழங்கப்படும் போர்வை மற்றும் காலணி, சலவை தொழிலாளர்களுக்கு இலவச இஸ்திரி பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு இணை சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் போன்ற நலத்திட்டங்கள் இந்தாண்டு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
இதனால், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் நடையாய் நடந்து கொண்டுள்ளனர்.

