/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புது பொலிவு பெற்றது ஸ்கேட்டிங் மைதானம் உழவர்கரை நகராட்சிக்கு சபாஷ்
/
புது பொலிவு பெற்றது ஸ்கேட்டிங் மைதானம் உழவர்கரை நகராட்சிக்கு சபாஷ்
புது பொலிவு பெற்றது ஸ்கேட்டிங் மைதானம் உழவர்கரை நகராட்சிக்கு சபாஷ்
புது பொலிவு பெற்றது ஸ்கேட்டிங் மைதானம் உழவர்கரை நகராட்சிக்கு சபாஷ்
ADDED : மார் 24, 2025 04:13 AM

புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியால் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் மீண்டும் புதுபொலிவு பெற்றது.
லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து நேற்று தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது.
இது சம்பந்தமாக உழவர்கரை நகராட்சியின் கவனத்திற்கு சென்ற நிலையில், ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று தீவிர துப்புரவு பணி நடந்தது.
ஸ்கேட்டிங் மைதானத்தை சுற்றிலும் பரவி கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டீல்கள் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன.
உழவர்கரை நகராட்சியின் தீவிர துாய்மை பணியால் லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானம் மீண்டும் புது பொலிவு பெற்றது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறும்போது, ஸ்கேட் டிங் மைதானத்தை சுற்றிலும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் குப்பை தொட்டி வைக்க முடிவு செய்துள் ளோம்.
ஸ்கேட்டிங் பயிற் சிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் கேரி பைகள், பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் கீழே வீசாமல் சமூக பொறுப்புணர்வுடன் குப்பை தொட்டியில் போட வேண்டும். என்றார்.