/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேற்கு வங்க பெண் தற்கொலை புதுச்சேரி போலீசார் விசாரணை
/
மேற்கு வங்க பெண் தற்கொலை புதுச்சேரி போலீசார் விசாரணை
மேற்கு வங்க பெண் தற்கொலை புதுச்சேரி போலீசார் விசாரணை
மேற்கு வங்க பெண் தற்கொலை புதுச்சேரி போலீசார் விசாரணை
ADDED : ஆக 13, 2025 02:41 AM
புதுச்சேரி: மேற்கு வங்கத்தில், தற்கொலைக்கு முயன்ற பெண், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அடுத்த பூர்பா மெதினியரை சேர்ந்தவர் பிரஹலாத் டோல்,27; இவரது மனைவி ராக்கிஸ்ரீ,22; திருமணமாகி மூன்றாண்டாகும் இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், உடல்நிலைப் பாதிக்கப்பட்டு, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ராக்கிஸ்ரீ , அங்குள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட பல மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 4ம் தேதி மீண்டும் வயிற்று வலி அதிகரித்தது.
அதில், விரக்தியடைந்த ராக்கிஸ்ரீ, வீட்டில் செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.ஆபத்தான நிலையில் இருந்த ராக்கிஸ்ரீயை, அவரது குடும்பத்தார் மீட்டு கொல்கத்தாவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் மெடிக்கல் சென்டரில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளித்த பின், கடந்த 6ம் தேதி மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து வந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 8 ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை துவங்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி அன்று இரவு இறந்தார்.
இதுகுறித்து, மேற்குவங்க மாநிலம், நந்தகுமார் போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.