/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.15 கோடி மோசடி மேற்கு வங்க மாநில வாலிபர் கைது
/
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.15 கோடி மோசடி மேற்கு வங்க மாநில வாலிபர் கைது
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.15 கோடி மோசடி மேற்கு வங்க மாநில வாலிபர் கைது
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.15 கோடி மோசடி மேற்கு வங்க மாநில வாலிபர் கைது
ADDED : ஏப் 10, 2025 04:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ. 5.15 கோடி மோசடி செய்த மேற்கு வங்க வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் தனியார் நிறுனத்தின் மேலாளர் சுகியா. இவருக்கு கடந்த 25ம் தேதி நிறுவனத்தின் உரிமையாளர் புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ் ஆப் கால் வந்தது. அதில் பேசிய நபரை நிறுவனத்தின் உரிமையாளர் என நம்பி, அவர் கூறிய வங்கி கணக்குகளில் பல தவணைகளாக 5.15 கோடி ரூபாயை சுகியா, அனுப்பினார்.
இந்நிலையில் உரிமையாளர் போனில் பேசியபோது, சுகியா பணம் அனுப்பிய விபரத்தை கூறினார். அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், பணம் அனுப்பிய வங்கி கணக்குகள், வாட்ஸ் ஆப் கால்களை ஆய்வு செய்ததில், அவரது புகைப்படத்தை வைத்து போலி முகநுால் பக்கத்தை துவங்கி, மர்ம நபர் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மோசடியில் ஈடுபட்டது மேற்கு வங்க மாநிலம், முஷராபாத் மாவட்டத்தை சேர்ந்த நஸீபுல் இஸ்லாம், 34, என, தெரிய வந்தது.
மேற்கு வங்கம் சென்ற போலீசார் அவரை கைது செய்து, நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கூறுகையில், பணம் மோசடியில், வெளிநாட்டு கும்பல் இருப்பது தெரிய வந்தது.
மோசடி செய்த ரூ.5.15 கோடியில், ரூ.2.3 கோடி முடக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.
வேலைவாய்ப்பு, கடனுதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் அரஸ்ட் என, மர்ம கும்பல் பேசி மோசடி செய்து வருகிறது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' என்றார்.