/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட் சேர்க்கைக்கான விண்ணப்பம் எப்போது? சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
/
நீட் சேர்க்கைக்கான விண்ணப்பம் எப்போது? சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
நீட் சேர்க்கைக்கான விண்ணப்பம் எப்போது? சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
நீட் சேர்க்கைக்கான விண்ணப்பம் எப்போது? சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
ADDED : ஜூலை 22, 2024 01:58 AM

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. மொத்தம் 23 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வில் முறைகேடு புகார் எழுந்தது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் சர்ச்சை, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடுத்தடுத்து வந்தன. இதனால் நீட் இளநிலை மருத்துவ படிப்புக்கான தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து தேர்வு மையங்கள் வாரியாக முடிவுகள் வெளியிட உத்தரவிட்டது. அதையடுத்து தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என நான்கு பிராந்தியங்களாக பிரித்து ஒவ்வொரு தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்களின் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இந்த தேர்வு முடிவுகளை மாணவ- மாணவிகள் இணையதளம் மூலம் பார்த்து கொள்ளலாம். https://neet.ntaonline.in/frontend/web/common-scorecard/index என்ற இணைய முகவரியில் தாங்கள் தேர்வு எழுதிய சென்டர்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
நீட் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை சென்டாக் முடுக்கிவிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதற்கான அனைத்தும் ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்துள்ளது.இருப்பினும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியான எம்.சி.சி., மாணவர் சேர்க்கையை விண்ணப்பம், கவுன்சிலிங் அட்டவணையை வெளியிட்டதும், சென்டாக்கும் கவுன்சிலிங் நடைமுறைகளும் துவக்கப்படும் என, அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நீட் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, ஏதுவாக ஜாதி, விடுதலை போராட்ட வீரர் வாரிசு சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர் உள்ளிட்ட சான்றிதழ்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் மாணவர்கள் தங்களுடைய பிராந்திய இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள், கிறிஸ்துவ, தெலுங்கு பேசும் சிறுபான்மையினர் அதற்கான சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டு சான்றிதழ்களையும், அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித் துறையால் வழங்கப்பட்ட தொடர்ச்சியாக கல்வி சான்றிதழ்களையும் தயாராக வைத்து கொள்ளுங்கள் என, அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினர் வருவாய் துறையால் கடந்த ஏப்ரல் 1ம் தேதி பிறகு வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளதோடு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளை சென்டாக் துரிதப்படுத்தி வருகிறது.