/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
10,000 பேருக்கு பென்ஷன் எப்போது? முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
10,000 பேருக்கு பென்ஷன் எப்போது? முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
10,000 பேருக்கு பென்ஷன் எப்போது? முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
10,000 பேருக்கு பென்ஷன் எப்போது? முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : ஆக 17, 2025 03:37 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தியாகிகள் கவுரவிப்பு விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில, முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, தியாகிகளை கவுரவித்து பரிசு வழங்கி பேசியதாவது:
புதுச்சேரி அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் புதிதாக விண்ணப்பித்த 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை அடுத்த மாதம் (செப்.,) முதல் வழங்கப்படும். விடுதலை போராட்ட தியாகிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும். தியாகிகளுக்கு விரைவில் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி மாநிலத்துக்கு என, தனி அதிகாரம், மாநில அந்தஸ்து வேண்டும். யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி இருக்கிறது. முழு அதிகாரம் உள்ள மாநிலமாக நாம் திகழ வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் அரசுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் கவர்னரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அது மாற வேண்டும். அப்போது தான் நாம் முழுமையான சுதந்திரம் பெற்ற எண்ணம் வரும்.
நமக்கு மாநில அந்தஸ்து தேவை. டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த எண்ணம் வலுப்பெற்று வருகிறது.
அதற்காக நண்பர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.விரைவில் மக்களின் ஆதரவோடு மாநில அந்தஸ்தை நாம் பெறுவோம்' என்றார்.