/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் சுற்றுலா திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் சுற்றுலா திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் சுற்றுலா திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் சுற்றுலா திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : அக் 13, 2024 07:14 AM

புதுச்சேரியில் சுற்றுலா திட்டத்தின் மூலம் வருவாய் பெருக்கும் வகையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் கடற்கரையில் 100 ஏக்கர் பரப்பளவில் பொழுது போக்கு பூங்காவுடன் கூடிய, திரைப்பட நகரம் அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான நிலையில், நிதி நெருக்கடி காரணமாக அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு காங்., ஆட்சியின் போது மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ், மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் கடற்கரை பகுதியில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் செலவில், கடற்கரையோரம் மரத்தாலான குடில்கள், சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா, உணவகம், கழிவறைகள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சோலார் மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது.
விடுமுறை, பண்டிகை நாட்களில் பொது மக்கள் அதிகளவில் கடற்கரைக்கு வந்து சென்றனர். ஆனால், இந்த சுற்றுலா திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், அங்குள்ள கட்டடங்கள் சமூக விரோதிகளின் புகலிகமாக விட்டது.
கடற்கரையோரம் இருந்த கொட்டகையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து வருகிறது.
எனவே, மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் கடற்கரையில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுலா திட்ட பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.