/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளத்தின் சுவரை உடைத்தது யார்? மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
/
குளத்தின் சுவரை உடைத்தது யார்? மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
குளத்தின் சுவரை உடைத்தது யார்? மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
குளத்தின் சுவரை உடைத்தது யார்? மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை
ADDED : டிச 08, 2024 04:48 AM
வில்லியனுார் தொகுதி கொம்பாக்கம், வீரன்குளம் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி மதிப்பில் துார்வாரி நடைபாதையுடன் புனரமைக்கப்பட்டது. குளம் துார்வாரி கரைகள் பலப்படுத்தி, படித்துறை, குளத்தை சுற்றி சுவர், இருக்கைகள், சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டது. கடந்த சில மாதத்திற்கு முன்பு குளத்தின் சுவரில் விரிசல் விழுந்த வீடியோ வைரலானது.
அடுத்த சில மாதத்தில் குளத்தின் தெற்கு பக்கம், பக்கவாட்டு இரும்பு கிரீல் சுவர் சூறை காற்றில் விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரலானதால், இரும்பு கிரீல் சுவரை கான்கிரீட் துண்களுடன் இணைத்து மீண்டும் அமைத்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 2வது முறையாக இரும்பு கிரீல் சுவர் இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் யாரோ கிரீல் சுவரை வேண்டுமென்றே இடித்து சேதப்படுத்தியதாக புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர், முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.