ADDED : செப் 02, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி புஸ்சி வீதி அருகில் உள்ள அண்ணா திடலில், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 29ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
