ADDED : நவ 22, 2026 06:33 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருளையன்பேட்டை, அய்யனார் கோவில் வீதியில் 45 வயது மதிக்கதக்கவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
