/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பாஜ., தலைவர் யார்? இன்று மாலை தெரியும்
/
புதுச்சேரி பாஜ., தலைவர் யார்? இன்று மாலை தெரியும்
ADDED : ஜூன் 28, 2025 11:52 PM
புதுச்சேரி பாஜ., புதிய தலைவருக்கான தேர்தல் மனு தாக்கல் இன்று நடக்கிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் அமைச்சர் சாய் சரவணன் மற்றும் மூன்று நியமனம் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர்.
அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் பாஜ., அலுவலகத்தில் வெளியானது. அதையொட்டி, பாஜ., அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அகிலனிடம் இன்று தலைவருக்கான தேர்தல் மனு தாக்கல் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கிறது.
அதன் பின், மதியம் 1:00 மணிக்கு துவங்கி 3:00 மணி வரை மனுக்களை வாபஸ் பெறுவது நடக்கிறது. புதிய தலைவர் யார் என்பது இன்று மாலை தெரிந்து விடும்.