/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலில் யாருக்கு 'சீட்'காங்., கட்சி ரகசிய சர்வே
/
தேர்தலில் யாருக்கு 'சீட்'காங்., கட்சி ரகசிய சர்வே
ADDED : ஆக 31, 2025 12:13 AM
புதுச்சேரி மாநிலம், காங்., கட்சியின் கோட்டை. புதுச்சேரியில் ஆறு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்த காங்.,கட்சி கடந்த 2021ம் ஆண்டு நடந்த 15-வது சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஆட்சியை பறி கொடுத்தது. அதுவும் 2 தொகுதியில் மட்டுமே காங்., கட்சி வெற்றிப்பெற்றது அக்கட்சியிலேயே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் எப்போதும் காங்., கட்சியின் கோட்டை என மீண்டும் நிருபித்து வெற்றிக்கனியை பறிக்க காங்., மேலிடம் இந்த முறை தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றது. தி.மு.க., போன்று ஒவ்வொரு தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர் யார் என ரகசிய சர்வே டில்லி மேலிடம் எடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியில் கடந்த சட்ட சபை தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் யார், அவருக்கு தற்போது உண்மையிலேயே இப்போது செல்வாக்கு உள்ளதா, அவருக்கு அடுத்து யாரை நிறுத்தினால் அத்தொகுதியில் வெற்றி பெற முடியும் என அனைத்து தகவல்களையும் காங்., மேலிடம் சர்வே நடத்தி திரட்டியுள்ளது.
இந்த சர்வே அடிப்படையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் சீட்டு கொடுக்கவும் காங்., மேலி டம் திட்டமிட்டு காய் நகர்த்திவருகிறது.