/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ., தலைவர் பதவி யாருக்கு: தமிழகத்தை போன்று தேர்தலா?
/
புதுச்சேரி பா.ஜ., தலைவர் பதவி யாருக்கு: தமிழகத்தை போன்று தேர்தலா?
புதுச்சேரி பா.ஜ., தலைவர் பதவி யாருக்கு: தமிழகத்தை போன்று தேர்தலா?
புதுச்சேரி பா.ஜ., தலைவர் பதவி யாருக்கு: தமிழகத்தை போன்று தேர்தலா?
ADDED : ஏப் 11, 2025 04:05 AM

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள பா.ஜ., அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்களை கைப்பற்றுவதற்காக கட்சியை பலப்படுத்தி வருகிறது.
30 சட்டசபை தொகுதிகளிலும் 1.6 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்த நிலையில், அனைத்து தொகுதி, அணி தலைவர்கள் நியமித்து, கட்சி பணியில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இன்னும், மாநில தலைவர் பதவி மட்டுமே அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.
புத்தாண்டில் புதிய தலைமை என்ற முழக்கத்துடன் கடந்த ஜனவரி மாதமே பா.ஜ., மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என, அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், கட்சி நிர்வாகிகள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனாலும் புத்தாண்டு பிறந்து நான்கு மாதம் தொட்ட நிலையில் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்படவில்லை.
பல மாநிலங்களுக்கு அடுத்தடுத்து மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் புதுச்சேரி பா.ஜ., தலைவர் விஷயத்தில் மட்டும் பொறுமையாக ஆராய்ந்து வருகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அறிவிக்கும்போது, புதுச்சேரி பா.ஜ., தலைவரும் சேர்த்தே அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென தமிழக பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு பொதுப்படையாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தை போன்று, புதுச்சேரியில் எந்நேரமும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என, கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., தலைவர் பதவிக்கு குறி வைத்து காய் நகர்த்தி வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் அடுத்த கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவித்தால் அதில்போட்டியிடவும் தயாராகி வருகின்றனர்.தமிழக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். அவரை, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் பரிந்துரைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், புதுச்சேரி பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் புதிதாக கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ.,க்களாகியுள்ள பலரது தலைவர் பதவி கனவு கானல் நீராகிவிடும். குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் பிற கட்சியில் இருந்து உதிர்ந்து, தாமரையுடன் ஐக்கியமானவர்கள், மாநில தலைவர் பதவி ரேஸில் இருக்க முடியாது.
இதனால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதே நேரத்தில் நீண்ட நாட்களாக கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் சிம்மாசனம் ஆசையில் உற்சாகத்துடன் உள்ளனர்.தேர்தல் இருந்தாலும், தேர்தல் இல்லாவிட்டாலும் தமிழ் புத்தாண்டு பிறந்ததும் புதுச்சேரிக்கு மாநில தலைவர் பதவி நியமன அறிவிப்பு வெளியிட கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதால் பா.ஜ.,வில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.