தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டு தொகுதியில் யாருக்கு சீட்... காங்., - தி.மு.க., மீண்டும் உரசல்

 மண்ணாடிப்பட்டு தொகுதியில் யாருக்கு சீட்... காங்., - தி.மு.க., மீண்டும் உரசல்

 மண்ணாடிப்பட்டு தொகுதியில் யாருக்கு சீட்... காங்., - தி.மு.க., மீண்டும் உரசல்


ADDED : பிப் 01, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி மாநிலம் எப்போதும் காங்., கட்சியின் கோட்டை. அந்த அளவிற்கு காங்., கட்சி ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சி இருந்துள்ளது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் காங்., படுதோல்வியுடன் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று சறுக்கியது. அதே வேளையில் தி.மு.க., 6 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தில் அமர்ந்து எழுச்சி பெற்றது.

இதனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை யார் என்பதில் இரு கட்சிகளுக்கு இடையே உரசல் இருந்து வருகிறது.

தமிழகத்திற்கு தி.மு.க., தான் தலைமை. புதுச்சேரிக்கு காங்., தான் தலைமை என்று காங்., கூறி வருகிறது. தி.மு.க., விற்கு ஒற்றை இலக்க சீட்டு போதும். புதுச்சேரியின் 22 தொகுதிகளில் காங்., தான் போட்டிடுவோம் என, ராகுலை சந்தித்து காங்., தலைவர்கள் நேரில் சொல்லிவிட்டனர்.

ஆனால் தி.மு.க., கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது. 30 தொகுதிகளிலும் தனித்தே நிற்கும் அளவிற்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளரை தேடி பிடித்து இறக்கியுள்ளது.

அப்படியே கூட்டணி என்றாலும், அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

கடந்த முறை 13 இடங்களில் தி.மு.க., போட்டியிட்ட சூழ்நிலையில் அதை காட்டிலும் கூடுதலாக 7 இடங்கள் வரை போட்டியிடுவோம் என பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவாவும் அதிரடியாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்., முன்னாள் எம்.எல்.ஏ., டி.பி.ஆர்., செல்வம் திடீரென காங்., கட் சியில் இணைந்தா ர். இதற்கு காங்., கட்சி மேலிடமும் பச்சைக் கொடி காட்டிய நிலையில் இந்த விவகாரத்தில் காங்., - தி.மு.க., இடையே மீண்டும் உரசல் வெடித்துள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மண்ணாடிப்பட்டு தொகுதியில் தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது. வேட்பாளரை ஏற்கனவே களம் இறக்கிவிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் கூட மண்ணாடிப்பட்டு தொகுதியில் தி.மு.க., பா.ஜ.,வை எதிர்த்து நின்றது.

பா.ஜ., வேட்பாளர் நவச்சிவாயம் 14,939 ஓட்டுகள் பெற்றார். தி.மு.க., வேட்பாளர் ஏ.கே., குமார் 12,189 ஓட்டுகள் பெற்றார். எனவே 2,750 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் நின்ற டி.பி.ஆர்., செல்வம் 7,679 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க.,வேட்பாளர் ஏ.கே.குமார் 7,260 ஓட்டுகள் பெற்றார். அந்த தேர்தலிலும் தி.மு.க., வெறும் 419 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தது.

எனவே, இந்த முறை மண்ணாடிப்பட்டு தொகுதியை தி.மு.க., விட்டுக்கொடுக்க முடியாது என முழுவீச்சில் களம் இறங்கிவிட்டது. எனவே டி.பி.ஆர்., செல்வத்திற்கு கூட்டணியில் சீட் கிடைப்பது கேள்விகுறி தான்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us