sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 என்.ஆர்.காங்.,கில் யாருக்கு சீட்டு! சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்: அதிர்ச்சி தர தயாராகும் ரங்கசாமி

/

 என்.ஆர்.காங்.,கில் யாருக்கு சீட்டு! சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்: அதிர்ச்சி தர தயாராகும் ரங்கசாமி

 என்.ஆர்.காங்.,கில் யாருக்கு சீட்டு! சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்: அதிர்ச்சி தர தயாராகும் ரங்கசாமி

 என்.ஆர்.காங்.,கில் யாருக்கு சீட்டு! சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம்: அதிர்ச்சி தர தயாராகும் ரங்கசாமி


ADDED : ஜன 16, 2026 06:58 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என, தெரியாமல் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் பாஜ., கூட்டணியுடன் ஆளுங்கட்சியாக உள்ள என்.ஆர்.காங்., கடந்த தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது முதல்வர் ரங்கசாமி உள்பட 10 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் உள்ள நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்.எல்.ஏ., க்களுக்கு (முதல்வர் ரங்கசாமி தவிர) மற்றவர்களுக்கு மீண்டும் சீட்டு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மீது, முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். இதற்கு காரணம், கடந்த தேர்தலில், செலவிற்கு நிதியுடன் சீட்டு வழங்கி, அழகு பார்த்த முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக சிலர், காங்., மற்றும் தி.மு.க., வுடன் ரகசிய கூட்டு வைத்துக் கொண்டு வரும் தேர்தலில் அக்கட்சிகளில் நிற்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சபட்சமாக அமைச்சர் ஒருவர், நலத்திட்ட உதவிகளை என்.ஆர்.காங்., கட்சியினருக்கு வழங்காமல், எதிர்க்கட்சியினருக்கு வாரி வழங்கி, அவர்களுடன் நட்பு பாராட்டி வருவதும் முதல்வருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது.

மேலும் முதல்வர் ரங்கசாமி, தொகுதி மாறப்போவதாகவும், அருகாமையில் உள்ள தன் கட்சி வசமுள்ள தொகுதியில் நிற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் தேர்தலில் யாருக்கு சீட்டு கிடைக்கும் எனத் தெரியாமல் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us