/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தரமற்ற மருந்து விவகாரத்தில் மாஜி முதல்வரை சேர்க்காதது ஏன்? முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கேள்வி

ADDED : அக் 30, 2025 07:34 AM
புதுச்சேரி: ஊழல் வாதிகளிடமிருந்து புதுச்சேரியை காப்பாற்ற மக்கள் முன்வர வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
புது ச்சேரி மாநிலத்தில் அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்து கொள்முதல் செய்ததாக, சுகாதார இயக்குனர்கள் உள்ளிட்ட 6 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரு ஆட்சியிலும், ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு மலிந்துள்ளது.
அதிகாரிகள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில், மூளையாக செயல்பட்ட அப்போதைய முதல்வர் மற்றும் அமைச்சரை ஏன் இந்த வழக்கில் சேர்க்கவில்லை. இந்த ஊழலில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து கவர்னர் உயர் மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
ஊழல் வாதிகளிடமிருந்து, புதுச்சேரியை காப்பாற்ற மக்கள் முன்வர வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.