/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொப்பரை தேங்காய் வாங்கி தருவதாக ரூ. 1.33 கோடி மோசடி; கணவருக்கு ஜாமின் கேட்க வந்த மனைவி கைது
/
கொப்பரை தேங்காய் வாங்கி தருவதாக ரூ. 1.33 கோடி மோசடி; கணவருக்கு ஜாமின் கேட்க வந்த மனைவி கைது
கொப்பரை தேங்காய் வாங்கி தருவதாக ரூ. 1.33 கோடி மோசடி; கணவருக்கு ஜாமின் கேட்க வந்த மனைவி கைது
கொப்பரை தேங்காய் வாங்கி தருவதாக ரூ. 1.33 கோடி மோசடி; கணவருக்கு ஜாமின் கேட்க வந்த மனைவி கைது
ADDED : ஜன 29, 2025 05:17 AM
புதுச்சேரி : கொப்பரை தேங்காய் வாங்கி தருவதாக கூறி, ரூ. 1.33 கோடி மோசடி செய்தவழக்கில், கணவருக்கு ஜாமின் கேட்க வந்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பூமியான்பேட்டை, வள்ளலார் நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கதிரவன், 30; தமிழகம் முழுதும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
துபாயில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கடந்த 2023ம் ஆண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கொப்பரை தேங்காய் வாங்கி அனுப்பும் ஆர்டர் கதிரவனுக்கு கிடைத்தது.
உடனடியாக அதிக அளவிலான கொப்பரை தேங்காய் வாங்க வேண்டும் என்பதால், ஆன்லைனில் கொப்பரை தேங்காய் குறித்த தகவல்களை தேடினார்.
அதில், பொள்ளாச்சி, கோயம்புத்துார், திருப்பூர் பகுதியில் கொப்பரை தேங்காய் விற்பனை செய்யும் பலரது தகவல் கிடைத்தது.வியாபாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது, முன் பணம் செலுத்த கூறினர்.
அதன்படி, கொப்பரை தேங்காய் வாங்க கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட், செப்., மாதத்தில் ரூ. 1.33 கோடி பணம் வங்கி கணக்கு மூலம் செலுத்தினார். ஆனால், பல மாதங்கள் கடந்தும் கொப்பரை தேங்காய் லோடு வரவில்லை.
முன்பணம் பெற்ற நபர்களை தொடர்பு கொண்டு பேசினாலும், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றினர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் பணம் பெற்று பொள்ளாச்சியைச் சேர்ந்த லட்சுமணபிரபு, 47; என்ற நபரை சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர்.
சிறையில் உள்ள லட்சுமணபிரபு தனது வங்கி கணக்கிற்கு வந்த மொத்த பணத்தையும், தனது மனைவி பத்மஸ்ரீ பெயருக்கு அனுப்பி உள்ளார்.மேலும், இந்த கும்பல் கோயம்புத்தார் பகுதியில் ரூ. 5 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
மோசடி வழக்கில் சேர்க்கப்பட்டபத்மஸ்ரீ விசாரணைக்கு ஆஜராக சைபர் கிரைம் போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில், சிறையில் உள்ள தனது கணவர் லட்சுமணபிரபுக்கு ஜாமின் பெற அவரது மனைவி பத்மஸ்ரீ நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, பத்மஸ்ரீ மீதும் மோசடி வழக்கு உள்ளது.
வழக்கு விசாரணைக்கு இதுவரை ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார் எனதெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் பத்மஸ்ரீயை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

