தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை

கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை

கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை


ADDED : செப் 03, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டுச்சேரி: காரைக்காலில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால், கோட்டுச்சேரி, கீழத்தெரு ஜி.எஸ்.டி. நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரன். இவர், வயது முதிர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி இறந்தார். இவரது மனைவி சுசிலா, 48, கணவர் இறந்த துயரத்தை தாங்கமுடியாமல் மனவேதனையில் இருந்து வந்தார்.

கடந்த 26ம் தேதி இரவு வீட்டில் இருந்த பினாயிலை சுசிலா குடித்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின்பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us