தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கணவருடன் பிரச்னை; மனைவி தற்கொலை

 கணவருடன் பிரச்னை; மனைவி தற்கொலை

 கணவருடன் பிரச்னை; மனைவி தற்கொலை


ADDED : ஏப் 19, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால், கீழவெளி மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப் மகன் சாமுவேல். இவரது மனைவி சுபஸ்ரீ, 33. இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு, தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். பின், சாமுவேலின் தங்கை பிலோமினா இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறியுள்ளார். சமாதானம் பேசும்போது சுபஸ்ரீ மற்றும் சாமுவேல் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த சுபஸ்ரீ கடந்த 17ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுக்குறித்து சுபஸ்ரீயின் தந்தை தங்கதுரை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சுபஸ்ரீ இறப்புக்கு காரணமான கணவர் சாமுவேல், அவரது தாய் விஜயா மற்றும் தங்கை பிலோமினா, அவரது கணவர் பிரகாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us