/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவி கொலை வழக்கு: சந்தேக கணவர் கைது
/
மனைவி கொலை வழக்கு: சந்தேக கணவர் கைது
ADDED : நவ 06, 2025 05:37 AM
புதுச்சேரி: நடத்தையில் சந்தேகித்து மனைவியை கொலை செய்த, கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஏனாம் பல்லாரி வீதியை சேர்ந்தவர் நானி,26; கொத்தனார். இவரது மனைவி தினா (எ) திவ்யா, 24; மனைவி நடத்தையில், சந்தேகித்து,அவரிடம் நானி அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில், திவ்யா, கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.இதுகுறித்து, ஏனாம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி கழுத்தை நெரித்து, கொலை செய்து விட்டு, நானி தப்பி சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த நானியை, ஏனாம் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

