ADDED : நவ 07, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வடலுார், தோமியா நகரை சேர்ந்தவர் கதிர்வேல்,54; துப்புரவு பணியாளர். இவரது இரண்டாவது மனைவி சிங்காரி,39.
கடந்த 1ம் தேதி கன்னியக்கோவிலில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்த சிங்காரி, கடந்த 4ம் தேதி ஊருக்கு புறப்பட்டார். அவரை, அவரது சகோதரி, கன்னியக்கோவிலில் இருந்து கடலுாருக்கு ஆட்டோவில் ஏற்றி விட்டார். ஆனால், சிங்காரி வீட்டிற்கு செல்லவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கதிர்வேல் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, சிங்காரியை தேடி வருகின்றனர்.

