UPDATED : அக் 16, 2026 08:50 PM
ADDED : அக் 16, 2026 08:47 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோசப், 54. இவர், தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அந்தோணி ஸ்டெல்லா மேரி,44; என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல், அந்தோணி ஸ்டெல்லா மேரிக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் மனநல பாதிப்பு அதிகரித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்த இவர், அடிக்கடி வீட்டை விட்டு சென்றுவிடுவது வழக்கம். கடந்த 11ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அந்தோணி ஸ்டெல்லா மேரி, இதுவரை திரும்பி வரவில்லை. இது குறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
