அடிக்கடி மக்கர் செய்யும் தீயணைப்பு கருவிகள்... கவனம் செலுத்துவாரா முதல்வர் ரங்கசாமி
அடிக்கடி மக்கர் செய்யும் தீயணைப்பு கருவிகள்... கவனம் செலுத்துவாரா முதல்வர் ரங்கசாமி
UPDATED : நவ 23, 2026 08:02 PM
ADDED : நவ 23, 2026 08:02 PM
கடந்த சில மாதங்களுக்கு முன், சுப்பையா சாலையில் தீயணைப்பு துறை வாயிலில் உள்ள பெரிய மரத்தின் மீது ஏறி ஆட்டம் காட்டிய நபரை பிடிக்க பெரிய ஏணி (ஸ்கை லிப்ட்) இல்லை. ஏர்பெட் இருந்தும், அதனை உபயோகிக்க தேவையான ஏர் கம்பரஷர் இல்லை. அதனை தொடர்ந்து விரிக்கப்பட்ட வலையும் பெரிய ஓட்டை. இதனால் 4 மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராடி அந்த வாலிபரை இறக்கினர்.
இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சம்பவமாக ராஜா தியேட்டர் சந்திப்பில்நேற்று தீவிபத்து ஏற்பட்ட மதுபான பாரில் சிக்கியவர்களை மீட்பதற்கு புகை வெளியேற்றக் கூடிய உபகரணம் (ஸ்மோக் ஏஜெக்டர்) ஸ்டார்ட் செய்ய முடியாமல் போராடினர்.
மக்களுக்கு இலவசங்களை வழங்கிவிட்டால் மட்டும் போதும் என ஆட்சியாளர்கள் நினைக்க கூடாது. பேரிடர் நேரத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய உபகரணங்கள் இல்லாமல் இருப்பது பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் முடியும் என்பது உண்மை.எனவே தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஏணிகள், மீட்பு வலைகள்,தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் முறையாகப்பராமரிக்கப்படுகின்றனவா, அவை அவசர காலங்களில் தடையின்றிச்செயல்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.பழுதடைந்த கருவிகளை உடனடியாகச் சரிசெய்யவும், தேவையான புதிய கருவிகளைவாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதையெல்லாம் முதல்வர் ரங்கசாமி நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்என்பதில்லை. தனக்குக் கீழ் உள்ள அரசு செயலர்கள் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு, முறையான கண்காணிப்பை உறுதி செய்தாலேபோதும். தீயணைப்பு வீரர்களின் கைகளில் இருக்கும் கருவிகள் அவர்களுக்குக்கைகொடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களைக் காப்பாற்றச் செல்லும்வீரர்களுக்கே ஆபத்து ஏற்படும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
