/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை மைதானத்தில் திரியும் கால்நடைகளால் அச்சுறுத்தல் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயுமா?
/
லாஸ்பேட்டை மைதானத்தில் திரியும் கால்நடைகளால் அச்சுறுத்தல் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயுமா?
லாஸ்பேட்டை மைதானத்தில் திரியும் கால்நடைகளால் அச்சுறுத்தல் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயுமா?
லாஸ்பேட்டை மைதானத்தில் திரியும் கால்நடைகளால் அச்சுறுத்தல் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயுமா?
ADDED : ஏப் 17, 2025 04:51 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் அச்சுறுத்தலாக திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு, அதன் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உழவர்கரை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாஸ்பேட்டை ஏர்போர்ட் ெஹலிபேடு மைதானத்தை சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் காலை, மாலையில் வாக்கிங் செல்கின்றனர்.
மைதானத்தை சுற்றியுள்ள இடங்களில் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், மைதானங்களில் கும்பலாக சுற்றி திரியும் கால்நடைகளால் மாணவர்கள், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சடைந்து வருகின்றனர்.
வாக்கிங் செல்வோரை தாக்க பாய்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதேபோல் லாஸ்பேட்டை சாலையில் குறுக்கே செல்லும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
புகார் வந்த பிறகு ஒவ்வொரு முறையும் உழவர்கரை நகராட்சி மாடுகளை பிடித்து அபராதம் போடுவதும், அதன் பிறகு சில நாட்களில் மீண்டும் அதே போல் மாடுகள் சுற்றித் திரிவதும் வாடிக்கையாகி விட்டது.
மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது.
தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். தவறினால் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உண்டு.
முதல் முறையாக மாடுகள் சிக்கினால் 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து கால்நடைகளை வீதியில் திரியவிட்டால் மாடுகளில் உரிமையாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.
கால்நடை உரிமையாளர்களை அழைத்து பல முறை உழவர்கரை நகராட்சி எச்சரித்தாகிவிட்டது. ஆனால் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளுவதே இல்லை.
எனவே கால்நடைகளை பறிமுதல் செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
அத்துடன் சமூக பொறுப்பு இல்லாமல் கால்நடைகளை சாலையிலும், பொதுஇடங்களில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது போலீசில் உழவர்கரை நகராட்சி புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.